ADDED : செப் 28, 2026 06:55 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி நந்தா நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையை அமைச்சர் சிவக்கொழுந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸால்பேட்டை தொகுதிக்குட்பட்ட நந்தா நகரில் பல ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து அவர்கள் அமைச்சர் சிவக்கொழுந்துவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அமைச்சரின் முயற்சியால், அப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது. புதிதாக போடப்படட்ட சாலையை அமைச்சர் சிவக்கொழுந்து ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் அப்பகுதி குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் என்.ஆர்.காங்., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
