புதுச்சேரி கடற்கரை சாலையில் புதிய மின் கம்பம், விளக்குகள் அமைப்பு
புதுச்சேரி கடற்கரை சாலையில் புதிய மின் கம்பம், விளக்குகள் அமைப்பு
UPDATED : நவ 11, 2026 12:20 AM
ADDED : நவ 11, 2026 12:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் புதிய மின் கம்பங்கள், விளக்குகள் அமைக்கப்பட்டு பிரகாசமாக எரிகிறது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி மாலை எதிர்பாராதவிதமாக மின் கம்பம் சரிந்து விழுந்த விபத்தில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, கடற்கரை சாலைப் பகுதியில் பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் இருந்த அனைத்து மின் கம்பங்களையும் உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, கடற்கரை சாலை முழுதும் ஆய்வு செய்யப்பட்டு, சேதமடைந்த மின் கம்பங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக உறுதியான புதிய மின் கம்பங்கள் நட்டப்பட்டன.
தற்போது, அந்தப் புதிய மின் கம்பங்களில் பிரகாசமாக எரியக்கூடிய புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால் கடற்கரை சாலைப் பகுதி மீண்டும் பொலிவு பெற்றுள்ளதுடன், மாலை மற்றும் இரவு வேளைகளில் இங்கு வரும் நடைபயிற்சியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கடற்கரை சாலையில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும்.
