புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை புதிய பயண நேர அட்டவணை வெளியீடு
புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை புதிய பயண நேர அட்டவணை வெளியீடு
ADDED : ஏப் 24, 2026 07:16 PM
புதுச்சேரி: புதுச்சேரி - பெங்களூரு இடையே கூடுதல் விமானம் இயக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ைஹதராபாத், ராஜமுந்திரி நகரங்களுக்கு சிறிய ரக ஏ.டி.ஆர்.,-72 ரக விமானம் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இதனை இண்டிகோ ஏர்லைன்ஸ் இயக்கி வருகிறது. இதில் 78 பேர் வரை அமர்ந்து செல்ல முடியும்.
புதுச்சேரியில் இருந்து வார விடுமுறை நாட்களில் பெங்களூருக்கு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதையடுத்து, புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு செல்லும் பயணிகளின் வசதிக்காக, வரும் மே 1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை துவங்கப்பட உள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கவுள்ள இந்த புதிய சேவைகளுக்கான விரிவான கால அட்டவணையை விமான நிலைய இயக்குநர் ராஜசேகர் ரெட்டி வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி -பெங்களூரு: புதிய அட்டவணையின்படி, பெங்களூருவில் இருந்து காலை 10:10 மணிக்கு புறப்படும் விமானம், காலை 11:15 மணிக்கு புதுச்சேரியை வந்தடையும். அங்கிருந்து மீண்டும் காலை 11:35 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
ராஜமுந்திரி-ஹைதராபாத்-புதுச்சேரி காலை 9:55 மணிக்கு ராஜமுந்திரியில் இருந்து புறப்பட்டு 11:15 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். அங்கிருந்து காலை 11:45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1:40 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். அங்கிருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7:20 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். அங்கிருந்து இரவு 7:50 ணிக்கு மீண்டும் புறப்பட்டு, இரவு 9:05 மணிக்கு ராஜமுந்திரியை சென்றடையும்.
இந்த கூடுதல் விமான சேவைகள் மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதால், கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கும், வணிக ரீதியாகப் பயணம் செய்வோருக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
