/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் 3ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க புதிய வழிமுறைகள் வெளியீடு
/
சென்டாக் 3ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க புதிய வழிமுறைகள் வெளியீடு
சென்டாக் 3ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க புதிய வழிமுறைகள் வெளியீடு
சென்டாக் 3ம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க புதிய வழிமுறைகள் வெளியீடு
ADDED : அக் 09, 2025 02:07 AM
புதுச்சேரி: மருத்துவ படிப்பிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கும் வழிமுறைகளை சென்டாக் வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு இதுவரை இரண்டு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த சென்டாக் தயாராகி வருகிறது. இந்த மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கும் வழிமுறைகளை சென்டாக் வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் 1. ஏற்கனவே முதல் அல்லது இரண்டாம் கட்ட கலந்தாய்வில்சீட் கிடைத்த மாணவர்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டால், ஒதுக்கப்பட்ட கல்லுாரியில் சேருவது கட்டாயமாகும்.
2. மூன்றாம் சுற்று கவுன்சிலிங்கில் இடம் ஒதுக்கப்பட்டு, அவர், ஒதுக்கப்பட்ட இடத்தில் சேரத் தவறினால், அவருடைய பதிவு கட்டண தொகை பறிமுதல் செய்யப்படும். அவர், அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.
3. தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் பட்டியல் சுற்று 3 சேர்க்கைக்குப் பிறகு சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்படும்.
4. முதல் கட்ட, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அனுமதிக்கப்பட்டு, மூன்றாம் கட்ட கலந்தாய்வில் தங்களுடைய சீட்டினை தக்கவைத்துக் கொண்ட அல்லது சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.
5. முதல் கட்ட அல்லது இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், மூன்றாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கீட்டிற்குப் பிறகு தங்களுடைய படிப்பினை வேண்டாம் என்று நிராகரிக்க அனுமதிக்கப்படாது.
முதல், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் கிடைத்த மாணவர்கள் அந்த சீட்டினை வேண்டாம் என்று சரண்டர் செய்ய நினைத்தால் தங்களுடைய டேஷ்போர்டு மூலமாக நுழைந்து வரும் 11ம் மாலை 5.00 மணிக்குள் தெரிவிக்கலாம்.
பதிவு கட்டணம் மூன்றாம் கட்ட மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க பதிவு கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். அதற்கான கட்டணத்தையும் சென்டாக் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு 1 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.டி., எஸ்.சி., மாற்றுத்திறனாளிகள், அரசு பள்ளி மாணவர்கள் 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
பி.ஏ.எம்.எஸ்., ஆயுர்வேத படிப்பிற்கு 10 ஆயிரம், எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத் திறனாளி, அரசு பள்ளி மாணவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். நிர்வாக இடங்களுக்கு 2 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி மையம் மூன்றாம் கட்ட கலந்தா ய்வில் ஏற்படும் சந்தேகங்களை போக்குவதற்கான உதவி மையத்தினை சென்டாக் திறந்துள்ளது. சந்தேகங்களுக்கு 0413-2655570,2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.