UPDATED : நவ 22, 2026 07:58 PM
ADDED : நவ 22, 2026 07:53 PM

புதுச்சேரி: புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் உள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின் குழந்தைகள் தின விழா கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலை பள்ளி பல்நோக்கு அரங்கில் கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் வரவேற்றார். புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மழலையர்களுக்கு குழந்தை தின வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், தலைமை விருந்தினராக ஆரோவில் சுகாதார மையம் ஹோமியோபதி மருத்துவர் மீரா, சிறப்பு விருந்தினராக புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத்துறை மக்கள் தொடர்பு அதிகாரி உமா அமலோற்பவமேரி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
புதுச்சேரி தன்னம்பிக்கை பொம்மலாட்ட கலை குழு நிறுவனர் எலிசபெத் முன்னிலை வகித்தார். விழாவில், மழலையர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை மழலையர் பள்ளியின் ஆசிரியர்கள் லஷ்மி பிரியா, மகாலட்சுமி, சுஜாதா, நித்தியா, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.
