/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்
/
புதுச்சேரியில் புதிய அமைச்சர் நியமனம்
ADDED : மார் 06, 2024 01:21 AM

புதுச்சேரி:புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இதில், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு (தனி) தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., சந்திரபிரியங்கா, போக்குவரத்து துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த ஆண்டு அக்., 8ம் தேதி அவரை, பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்தார், முதல்வர் ரங்கசாமி. சந்திரபிரியங்காவிற்கு பதிலாக புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல், அவர் வகித்த துறைகளை முதல்வரே கவனித்து வந்தார்.
இந்நிலையில், காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்., - எம்.எல்.ஏ., திருமுருகனை அமைச்சராக நியமிக்க, முதல்வர் ரங்கசாமி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். ஜனாதிபதியும் திருமுருகனை அமைச்சராக்க ஏற்றுக் கொண்டார்.
திருமுருகன் அமைச்சராக அறிவிக்கப்பட்டார். இவர், முன்னாள் வாரிய தலைவர் நளமகராஜனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

