ADDED : ஏப் 14, 2026 09:24 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிதம்பர கீதாராம குருக்கள் புதிய பஞ்சாங்கம் பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணபதி பூஜையுடன் பஞ்சாங்கம் வாசிப்பு நேற்று நடந்தது.
சிதம்பர கீதாராம குருக்கள் கலந்து கொண்டு, புதிய பஞ்சாங்கத்தை வாசித்து, பூஜையில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் புதிய தமிழ் வருட பஞ்சாங்கம் புத்தகத்தை வழங்கினார். திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை சாரதாம்பாள் கோவில் நிர்வாகிகள் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.
