/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவிதைக்களம் சார்பில் புதுக்கவிதை போட்டி
/
கவிதைக்களம் சார்பில் புதுக்கவிதை போட்டி
ADDED : ஏப் 01, 2025 04:20 AM

புதுச்சேரி: கவிதைக்களம் சார்பில் புதுக்கவிதை எழுதும் போட்டி நடந்தது.
புதுச்சேரியில் தமிழ்மொழி வளம் பெறவும், கவிஞர்களின் கவித்திறன் மேம்படுத்தவும் கவிதைக்களம் மூலம் புதுக்கவிதை எழுதும் போட்டி மாதந்தோறும் இறுதி சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கவிதை களம் சார்பில் நடந்த முதல் போட்டியை அமைப்பாளர் முருகேசன் துவக்கி வைத்தார். 'சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே' தலைப்பில் நடந்த போட்டியில், திரளான கவிஞர்கள் பங்கேற்று, கவிதைகளை எழுதினர்.
போட்டியில், சிறந்த மூன்று கவிதைகள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, கவிதைக்களம் 2வது போட்டியின் போது அறிவிக்கப்படும். தொடர்ந்து, 10 மாதங்கள் நடக்கும் போட்டிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு செய்யப்படும் நபருக்கு, 'கவிதைத் திலகம்' என்ற பட்டமும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
போட்டியானது, ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக் கிழமைகளில் குமுதம் இல்லம், எண்:32, 10வது குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி--605 005 என்ற முகவரியில் நடக்கிறது. மேலும், தகவல்களுக்கு 94432 57989 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

