தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதிய ஓட்டுச்சாவடி தகவல் வெளியீடு

 புதிய ஓட்டுச்சாவடி தகவல் வெளியீடு

 புதிய ஓட்டுச்சாவடி தகவல் வெளியீடு


ADDED : மார் 18, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதிய ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு வாக்காளர்களின் தகவலுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின் படி, புதுச்சேரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 918 ஓட்டுச்சாவடிகளில், பல்வேறு காரணங்களுக்காக 18 ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 79 ஓட்டுச் சாவடிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

வில்லியனுாரில் ஒரு ஓட்டுச் சாவடியில் இடம்பெற்றிருந்த வாக்காளர்களின் ஒரு பகுதியினர் வேறு ஓட்டுச் சாவடிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்த விவரங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகம், வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகம் ஆகியவற்றிலும், ceopuducherry.py.gov.in மற்றும் puducherry-dt.gov.in ஆகிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us