/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் புதிய நடைமுறை அமல்
/
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் புதிய நடைமுறை அமல்
ADDED : மே 24, 2025 07:42 PM
புதுச்சேரி,:புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தில் வழங்கப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழில், பெயர், பிறந்த தேதி, தாய், தந்தை பெயர், பிறந்த இடம் அல்லது இறந்த இடம், பதிவு எண், நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இனி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ஆதார் எண்ணையும் சேர்த்து குறிப்பிடும் வகையில், புதுச்சேரி உள்ளாட்சி துறை பிறப்பு, இறப்பு விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
பிறப்பை பதியும் போது பெற்றோரின் ஆதார் எண்ணையும், இறப்பை பதியும்போது இறந்தவர் ஆதார் எண்ணுடன், அவரது தாய், தந்தை அல்லது கணவன், மனைவி ஆதார் எண்ணையும் சேகரிக்க புதுச்சேரி அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏற்கனவே 100 சதவீதம் ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் ஆதார் எண் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏதும் இருக்காது.