/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருப்பதி, காரைக்கால் பகுதிகளுக்கு புதிய பி.ஆர்.டி.சி., பஸ்கள் நாளை முதல் இயக்கம்

ADDED : மார் 07, 2024 01:37 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து திருப்பதி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இரண்டு புதிய பஸ்கள், நாளை 8ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
புதுச்சேரி பி.ஆர்.டி.சி.யில், தொலைதுார வழித்தடத்தில் இயக்கப்படும், பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, 38 புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. இதில், புதுச்சேரிக்கு 26 பஸ்கள், காரைக்காலுக்கு 12 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதில் 12 புதிய பஸ்கள் பாடி கட்டும் பணி முடிந்து புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த புதிய பஸ்களை, கடந்த 1ம் தேதி முதல்வர், கவர்னர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் இருந்து இரண்டு, புதிய பஸ்கள் நாளை 8ம் தேதி, திருப்பதி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் தினமும், புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு இரவு 9:30 மணிக்கும், திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6:00 மணிக்கும் புறப்படுகிறது. இந்த பஸ்சில் முன்பதிவுடன் சேர்த்து ரூ. 285 கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு தினமும், காலை 5:00 மணி, மதியம் 1:30 மணிக்கும் புறப்படுகிறது. அதே போன்று, காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு காலை 8:45 மணி, மாலை 5:15 மணிக்கும் புறப்படுகிறது. இந்த பஸ்சில், முன்பதிவு சேர்த்து ரூ. 143 கட்டணமாகும்.
இவ்வாறு பி.ஆர்.டி.சி., போக்குவரத்து அதிகாரி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.