/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
/
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
ADDED : அக் 03, 2025 11:14 PM

வில்லியனுார் : பத்துகண்ணு முதல் கூனிமுடக்கு வரை புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை சாய்சரவணன் குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
ஊசுடு தொகுதி, பத்துக்கண்ணு முதல் கூனிமுடக்கு வரையில் மூன்று கி.மீ., துாரத்திற்கு மெயின்ரோட்டில் புதுச்சேரி மின் துறை சார்பில், புதிதாக 115 மின் கம்பங்களுடன் கூடிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடந்தது. சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர், இளநிலைப் பொறியாளர், பா.ஜ., தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், பா.ஜ., முன்னாள் தொகுதி தலைவர் அய்யனார், தொகுதி தலைவர் முத்தாலுமுரளி, தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் புருஷோத்தமன், மல்லிகா, உலகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.