/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்தமான குடிநீர் வழங்க புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் : ஜோஸ் சார்லஸ் மார்டின்

ADDED : செப் 03, 2025 05:42 AM
புதுச்சேரி : சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டுமென ஜோஸ் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுதும் உள்ள கிராமங்களுக்கு, வீட்டிற்கே குழாய் மூலம் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆனால், புதுச்சேரியில் நல்ல குடிநீர் கிடைப்பதே அரிதாக மாறி வருகிறது. குறிப்பாக, அரியாங்குப்பம், முதலியார்பேட்டை தொகுதிகளில் கடந்த சில மாதங்களாக இப்பிரச்னை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேங்காய்திட்டு, நைனார்மண்டபம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால், அவற்றை அகற்றிவிட்டு, புதிய குழாய்களை அமைக்க வேண்டும்.
அரசு சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்கள் மூலம் 20 லிட்டர் தண்ணீர் ரூ.7க்கு வழங்குவது போது, வீடுகள் வரை சுத்தமான குடிநீரை விநியோகிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
நிலத்தடி நீரை நன்னீராக கொண்டு வருவதற்கும், கடல்நீரை குடிநீராக மாற்றுவதற்கும் புதிய தொழில்நுட்பங்கள் தற்போது வந்துவிட்டன.
அத்தகைய நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களை வரவழைத்து அடுத்த கட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.