தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி ரயில் நிலையத்தில் புதிய டிக்கெட் கவுண்டர் திறப்பு

 புதுச்சேரி ரயில் நிலையத்தில் புதிய டிக்கெட் கவுண்டர் திறப்பு

 புதுச்சேரி ரயில் நிலையத்தில் புதிய டிக்கெட் கவுண்டர் திறப்பு


ADDED : ஜன 09, 2026 08:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 08:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் பழமையான வாயில் கட்டடம் இடிக்கப்பட உள்ளதையொட்டி, புதிய டிக்கெட் கவுண்டர் மற்றும் தற்காலிக வழி ஆகியவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

புதுச்சேரி ரயில் நிலையம் ரூ. 93 கோடியில் மேம்படுத்தும் பணி, கடந்த 2023ம் ஆண்டு துவங்கி நடந்து வருகிறது. அதனையொட்டி, பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதியதாக, பார்சல் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம், பைலட் ஓய்வறைகள், பயணிகள் காத்திருப்பு கூடம், நடை மேம்பாலம் லிப்ட், எஸ்கலேட்டர், உணவகம், வணிக வளாகம், மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் கட்டப்பட உள்ளது.

இதற்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது. ரயில் நிலையத்தில் முகப்பு கட்டடமாக விளங்கி வரும் பழமையான கட்டடத்தை இடிக்கும் பணிக்காக, இங்கு இயங்கிய அனைத்து பிரிவுகளும் சுப்பையா சாலை, முருகர் கோவில் எதிரில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

அதையொட்டி, பழைய கட்டடத்தின் மேம்பாலம் அருகில், ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்லும் வழி, கழிப்பிடம், (தட்கால்) முன்பதிவு இல்லாத டிக்கெட் கவுண்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. முருகர் கோவில் எதிரில் உள்ள புதிய கட்டடத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு டிக்கெட் கவுண்டர்களும் நேற்று திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us