தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

மணக்குள விநாயகர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

மணக்குள விநாயகர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு


ADDED : ஏப் 15, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 04:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தமிழ் புத்தாண்டையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கும் சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன.

சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மூலவர் சன்னிதியில், சிறப்பு அலங்காரத்தில் மணக்குள விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், தங்க தேரில் சுவாமி உட்புறப்பாடு நடந்தது.

கோவில் நிர்வாகம் சார்பில், ராமலிங்கம் எம்.எல்.ஏ., பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கினர். இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி பழனியப்பன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us