/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் போலீசாருடன் ஆய்வு
/
கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் போலீசாருடன் ஆய்வு
கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் போலீசாருடன் ஆய்வு
கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் போலீசாருடன் ஆய்வு
ADDED : டிச 19, 2024 06:34 AM

புதுச்சேரி: கடற்கரை சாலை புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் போலீசாருடன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஓட்டல்களில் அறைகள் புக்கிங் துவங்கி விட்டது.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்களில் பல்வேறு பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரி வருவர் என, முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர உள்ளூர் மக்கள் டிச., 31ம் தேதி, கடற்கரை சாலையில் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவர்.
வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த சில நிமிடத்தில் கடற்கரை சாலையில் கூட்ட நெரிசல் ஏற்படும். அதனை கட்டுப்படுத்த போலீஸ் தடியடி நடத்தி விரட்டி அடிப்பர். சாலைகளில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைவர். சில ஆண்டுகள் உயிரிழப்புகள் கூட நடந்துள்ளது.
எனவே, இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., சத்யசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், பிரவீன்குமார் திரிபாதி மற்றும் சட்டம் ஒழுங்கு, டிராபிக் எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்களுடன் கடற்கரை சாலையில் நேற்று ஆய்வு பணி மேற்கொண்டனர்.
தடுப்பு கட்டைகள் அமைப்பது, சி.சி.டி.வி., கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.