/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் பாதிக்காத வகையில் புத்தாண்டு கொண்டாட்டம்
/
மக்கள் பாதிக்காத வகையில் புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : டிச 24, 2024 05:29 AM
புதுச்சேரி: புத்தாண்டு நிகழ்ச்சியை கேளிக்கை வரியை செலுத்தாமல் நடத்தினால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் நலச் சங்க தலைவர் பாலா வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி, தனியார் நிறுவனங்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதிகம் சம்பாதிக்கின்றனர். கலை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், நகராட்சி, கொம்யூன் அலுவலகத்தில், கேளிக்கை மற்றும் இதர வரியை செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் பாதிக்காத வகையில், நிகழ்ச்சியை நடத்துவதற்கு கலெக்டர், போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை, டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய உள்ளது. கேளிக்கை வரி செலுத்தாமல் நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.