தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காமராஜர் நகர் தொகுதியில் காங்., சார்பில் புத்தாண்டு பரிசு

 காமராஜர் நகர் தொகுதியில் காங்., சார்பில் புத்தாண்டு பரிசு

 காமராஜர் நகர் தொகுதியில் காங்., சார்பில் புத்தாண்டு பரிசு


ADDED : நவ 26, 2025 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2025 07:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் புத்தாண்டு பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார்.

காமராஜர் அறக்கட்டளை சார்பில், காமராஜர் நகர் தொகுதியில் புத்தாண்டு பரிசு பொருட்கள் மற்றும் காலண்டர் அடங்கிய பரிசு பொருட்கள் வழங்கும் பணி துவங்கியது.

முதற்கட்டமாக காமராஜர் தொகுதி சாமிபிள்ளைத்தோட்டம் வார்டுக்குட்பட்ட லெனின் நகர் பகுதி மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளரும், காங்., சீனியர் துணை தலைவருமான தேவதாஸ் முன்னிலை வகித்தார். மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., பரிசு தொகுப்பினை தொகுதி மக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தொகுதி தேர்தல் தலைமை பொருப்பாளர் வழக்கறிஞர் மருதுபாண்டியன், பொருப்பாளர்கள் தியாகராஜன், பரணிதரன், வட்டார காங்., தலைவர் பார்த்திபன் மற்றும் காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us