/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ்ச் சங்கத்தில் ஆவணப்படம் வெளியீடு
/
தமிழ்ச் சங்கத்தில் ஆவணப்படம் வெளியீடு
ADDED : ஆக 27, 2014 12:43 AM
புதுச்சேரி : தமிழ்ச் சங்கத்தில் ஆவணப்பட வெளியீட்டு விழா நடந்தது.
புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் குறிஞ்சிவேந்தன், இரண்டாம் உலக போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் பட்ட துயரங்களைப் பற்றிய, 'சயாம்-பர்மா மரண ரயில்பாதை' என்ற ஆவணப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.12 ஆண்டு கால ஆய்வுகளின் அடிப்படையில் இந்த ஆவணப்படம் தமிழ் -ஆங்கிலம் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. அமைச்சர் ராஜவேலு, ஆவணப்படத்தை வெளியிட, சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் வையாபுரி மணிகண்டன் பெற்றுக்கொண்டார். பிரான்ஸ் தமிழ் கலாசார மன்ற தலைவர் இலங்கைவேந்தன், புதுச்சேரி தமிழ்ச்சங்க தலைவர் முத்து, பேராசிரியர் சேதுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.