நேயம் மக்கள் கழக வேட்பாளர் இளங்கோ நகரில் ஓட்டு வேட்டை
நேயம் மக்கள் கழக வேட்பாளர் இளங்கோ நகரில் ஓட்டு வேட்டை
ADDED : மார் 28, 2026 05:35 AM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகர் வார்டு பகுதிகளில் நேயம் மக்கள் கழக வேட்பாளர் நேரு 'குக்கர்' சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
உருளையன்பேட்டை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவுடன் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு (எ) குப்புசாமி 'குக்கர்' சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையொட்டி, நேயம் மக்கள் கழக தலைவரும், உருளையன்பேட்டை தொகுதி வேட்பாளர் நேரு (எ) குப்புசாமி நேற்று இளங்கோ நகர் வார்டு தென்னஞ்சாலை ரோடு பகுதியில் உள்ள ஜான்சி வீதி, கண்ணகி வீதி, குபேர் வீதி, எல்லையம்மன் கோவில் வீதி, எம்.ஜி.ஆர்.வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, ஜான்சி வீதி, கண்ணகி வீதி, எல்லையம்மன் கோவில் வீதி, எம்.ஜி.ஆர்., வீதிகளில் புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை எடுத்து கூறியும், கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட மக்கள் நலப் பணிகளை விட வருங்காலங்களில் கூடுதலாக மக்கள் பணியாற்ற 'குக்கர்' சின்னத்தில் ஓட்டு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதில், உருளையன்பேட்டை தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், பிரமுகர்கள்,நேயம் மக்கள் கழக நிர்வாகிகள், பிரமுகர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்.
