ADDED : ஏப் 05, 2026 11:23 PM

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியில் நேயம் மக்கள் கழக வேட்பாளர் நேரு (எ) குப்புசாமி, ஓட்டு சேகரித்தார்.
குபேர் நகர், கண்டக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகர் பகுதியில் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தபோது, அரசு குடியிருப்புகளில் 4 கோடி ரூபாய் செலவில் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் பணிகள் நடைபெற்றுள்ளது.
மேலும், அப்பகுதியில் சாலைகள் புதிய சிமென்ட் சாலையாக மாற்றப்பட்டிருப்பது குறித்தும், சுகாதாரமான குடிநீர் வழங்க குபேர் நகர் பகுதியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மின் பற்றாக்குறையை போக்க புதிய அதிநவீன மின்மாற்றி அமைத்து அதன் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து வாக்காளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்திட, தனக்கு குக்கர் சின்னத்தில் ஓட்டு அளித்து வெற்றி பெற செய்திட கேட்டுக் கொண்டார். த.வெ.க., மற்றும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
