/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தல் குறித்து முதல்வருடன் ஆலோசனை நிர்மல்குமார் சுரானா பேட்டி
/
சட்டசபை தேர்தல் குறித்து முதல்வருடன் ஆலோசனை நிர்மல்குமார் சுரானா பேட்டி
சட்டசபை தேர்தல் குறித்து முதல்வருடன் ஆலோசனை நிர்மல்குமார் சுரானா பேட்டி
சட்டசபை தேர்தல் குறித்து முதல்வருடன் ஆலோசனை நிர்மல்குமார் சுரானா பேட்டி
ADDED : ஜூலை 11, 2025 04:16 AM
புதுச்சேரி: புதிய அமைச்சர் மூன்று நாளில் பதவியேற்பார் என பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறினார்.
முதல்வர் ரங்கசாமியை, அவரது வீட்டில் சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறியதாவது;
நான் புதுச்சேரிக்கு வரும்போதெல்லாம், கூட்டணி கட்சி தலைவரான முதல்வரை சந்திப்பது வழக்கம். அதன்படி இன்று, அவரை அவரது வீட்டில் சந்தித்து 2026 தேர்தலுக்கு எப்படி தயார் ஆவது, நாம் என்னென்ன செய்ய வேண்டும், எந்த வேலைகளை வேகமாக செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
அமைச்சரவையில் இருந்து நாங்கள் யாரையும் நீக்கவில்லை. சாய்சரவணன்குமார் எதிர்வரும் தேர்தல் பணிக்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தானை நியமன எம்.எல்.ஏ.,விற்கு பரிந்துரைத்துள்ளோம். எங்களுக்குள் ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை பேசி சரி செய்து கொள்வோம்.
எங்களுடைய இலக்கு 2026 தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை நடத்தினோம். தற்போதைய கூட்டணி எதிர்வரும் தேர்தலிலும் தொடரும். கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் அந்த நேரத்தில் பரிசீலிப்போம். மேலும், தேர்தல் அறிவிப்புக்கு பின், யாருக்கு எத்தனை சீட் என்பதை முடிவு செய்வோம்.
எங்கள் கூட்டணிக்குள் சிறு, சிறு பிரச்னை இருக்கிறது என்று கூறவில்லை. சிறு, சிறு பிரச்னைகள் வரும். அதனை நாங்கள் பேசி சரி செய்து கொள்வோம். புதிய அமைச்சரை முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். 2 அல்லது மூன்று நாட்களில் புதிய அமைச்சர் பதவியேற்பார். பா.ஜ.,அமைச்சர் தான் ராஜினாமா செய்தார். அதனால், பா.ஜ.,வை சேர்ந்தவர் தான் புதிய அமைச்சராக பொறுப்பேற்பார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து குறித்து சிறப்பு சட்டசபையை கூட்ட வேண்டும் என என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனரே என நிருபர்கள் கேட்டதற்கு, நாங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம் என்றார்.