/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிர்மலா சீதாராமன் புதுச்சேரி வருகை கவர்னர், முதல்வர் வரவேற்பு
/
நிர்மலா சீதாராமன் புதுச்சேரி வருகை கவர்னர், முதல்வர் வரவேற்பு
நிர்மலா சீதாராமன் புதுச்சேரி வருகை கவர்னர், முதல்வர் வரவேற்பு
நிர்மலா சீதாராமன் புதுச்சேரி வருகை கவர்னர், முதல்வர் வரவேற்பு
ADDED : செப் 23, 2024 04:30 AM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு அரசு பயணமாக வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் ராஜ்நிவாசில் வரவேற்றனர்.
புதுச்சேரி அரவிந்தர் சொசைட்டி இலக்கிய விழாவில், பங்கேற்பதற்காக நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரிக்கு வருகை தந்தார்.
அரசு முறைப் பயணமாக வந்த அவர், ராஜ்நிவாசில் கவர்னர் கைலாஷ்நாதன் சந்தித்துப் பேச சென்றார்.
அப்போது, கவர்னர் கைலஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மத்திய நிதி அமைச்சரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வெள்ளி முருகர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து கவர்னர், முதல்வர், தலைமை செயலர்களுடன் புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் தொடர் பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார்.
இதேபோல், சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், அசோக் பாபு, ராமலிங்கம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக மத்திய நிதியமைச்சரை சந்தித்தனர்.
பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., மற்றும் பா.ஜ., கட்சி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ஆகியோர் நிதி அமைச்சரை சந்தித்து பேசினர்.
சந்திப்பின்போது தலைமைச் செயலர் சரத்சவுகான், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.