வீடியோ காலில் நித்யானந்தா புதுச்சேரி அமைச்சருக்கு ஆசி
வீடியோ காலில் நித்யானந்தா புதுச்சேரி அமைச்சருக்கு ஆசி
UPDATED : அக் 21, 2026 10:35 PM
ADDED : அக் 21, 2026 10:30 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, ஏம்பலத்தில் உள்ள கைலாசா நித்யானந்தா தியான பீட, குடமுழுக்கு விழாவிற்கு, நித்யானந்தா வருகை தர உள்ளதாக கூறி, பாதுகாப்பு கேட்டு, தியான பீட நிர்வாகிகள், செப்., 3ம் தேதி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தீயான பீடத்தில், ஆயுத பூஜை விழா, அக்., 19ம் தேதி நடந்த போது, புதுச்சேரி உள்துறை அமைச்சரான பா.ஜ.,வைச் சேர்ந்த நமச்சிவாயம் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.
அப்போது, கைலாசாவிலிருந்து வீடியோ காலில் தோன்றிய நித்தியானந்தா, நமச்சிவாயம் பெயரை குறிப்பிட்டு அருளாசி வழங்கினார்.
பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்யானந்தா, புதுச்சேரி உள்துறை அமைச்சருக்கு அருளாசி வழங்கிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
