தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நலத்திட்ட பணிகளை எடுத்து கூறி என்.எம்.கே., வேட்பாளர் ஓட்டு வேட்டை

நலத்திட்ட பணிகளை எடுத்து கூறி என்.எம்.கே., வேட்பாளர் ஓட்டு வேட்டை

நலத்திட்ட பணிகளை எடுத்து கூறி என்.எம்.கே., வேட்பாளர் ஓட்டு வேட்டை


ADDED : ஏப் 01, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 07:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: த.வெ.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் நேயம் மக்கள் கழக வேட்பாளர் நேரு உருளையன்பேட்டை தொகுதியில் ஓட்டு சேகரித்தார்.

அவர், நேற்று உருளையன்பேட்டை தொகுதி வாஞ்சிநாதன் வீதி, சுப்ரமணிய சிவா வீதி, காமராஜர் வீதி, குபேர் நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி குக்கர் சின்னத்தில் ஓட்டு சேகரித்தார்.

தொகுதியில் மக்களின் நலனுக்காக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக குபேர் நகரில் புதிய சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைத்து சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. வாடகை கட்டடங்களில் இயங்கிய அங்கன்வாடி மையங்களை, சொந்த கட்டடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை போக்க புதிய மின்மாற்றிகள் அமைத்து தடையில்லா மின்சாரம் வழங்குவதை எடுத்துக்கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின்போது, த.வெ.க., மற்றும் நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us