/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
/
புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
புதுச்சேரி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ADDED : அக் 23, 2024 05:53 AM

புதுச்சேரி : வங்க கடலில் உருவாகியுள்ள 'டானா'புயல் காரணமாக, புதுச்சேரி துறைமுகத்தில்ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளது. இது, அந்தமான் தீவு அருகே 'டானா' புயலாகஉருவாகி நகர்ந்து வருகிறது.இப்புயல் இன்று (23ம் தேதி) வலுவடைந்து, தீவிர புயலாக மாறும்.
இந்த புயல், வரும் 25ம் தேதி அதிகாலை ஓடிசா பூரி-சாகர் தீவு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டானா புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.