/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யாருடைய ஒத்துழைப்பும் இல்லை... முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்
/
யாருடைய ஒத்துழைப்பும் இல்லை... முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்
யாருடைய ஒத்துழைப்பும் இல்லை... முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்
யாருடைய ஒத்துழைப்பும் இல்லை... முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்
ADDED : டிச 15, 2024 05:57 AM
புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன் அரசு துறை செயலர், பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அதில், முதல்வர் ரங்கசாமி பேசுகையில், '15 ஆண்டுகளாக ஒரு பள்ளிக் கூடத்தை கட்ட முடியவில்லை. அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பது கிடையாது என தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
அடுத்த சில தினங்களில், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை அதிகாரி ஒருவர் சந்தித்தபோது, 'எந்த அதிகாரியும் வேலை செய்வது கிடையாது. என்னிடம் பேசும்போது ஏற்று கொள்கிறீர்கள். ஆனால் தலைமை செயலரிடம், செல்லும்போது அதை மாற்றி பேசுகின்றீர்கள்.
புதுச்சேரியில் தொழிற்சாலை துவங்க பலர் வருகின்றனர். சிங்கிள் விண்டோ முறையில் தொழிற்சாலை திறக்க அனுமதி கொடுக்க கூறுகிறேன். ஆனால் யாரும் அதை மதிப்பது கிடையாது. தேவையின்றி அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறீர்கள். அதனால் தொழிற்சாலை அமைக்க யார் விருப்பம் தெரிவித்து கேட்டாலும், இந்த பக்கம் வராதீர்கள் என கூறிவிட்டேன்.
நிர்வாகத்தில் மேலேயும் (மத்திய), கீழேயும் பழி வாங்குகின்றனர். 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கினால், நீங்கள் தடுக்கின்றீர்கள்.
கவர்னரே ஒப்புதல் கொடுத்தாலும், நீங்கள் செய்ய மறுக்கிறீர்கள் என, தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.