ADDED : நவ 27, 2026 07:34 PM

புதுச்சேரி: அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் போதையில்லா புதுச்சேரி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (நவ.,27) நடந்தது.
இதில் போதை இல்லா இந்தியாவை 2029 ஆண்டுக்குள் அடைவதற்கு புதுச்சேரி பங்களிப்பு ஒரு முன்னுதாரணமாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும், என்பதை தெளிவுபடுத்த வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
கோரிமேடு டிநகர் போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., சந்தியசுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., ராகவ் தலைமையிலும், லாஸ்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், போக்குவரத்து வடக்குப் பிரிவு ஸ்டேஷனில் சீனியர் எஸ்.பி., திவ்யா, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வம்சிதரரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
