/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தரமான சைக்கிள் கொள்முதல் செய்யாதது... ஏன்? அமைச்சரிடம் எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம்
/
தரமான சைக்கிள் கொள்முதல் செய்யாதது... ஏன்? அமைச்சரிடம் எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம்
தரமான சைக்கிள் கொள்முதல் செய்யாதது... ஏன்? அமைச்சரிடம் எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம்
தரமான சைக்கிள் கொள்முதல் செய்யாதது... ஏன்? அமைச்சரிடம் எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம்
ADDED : ஆக 08, 2024 02:00 AM
புதுச்சேரி : பட்ஜெட் மானிய கோரிக்கைள் மீதான விவாதத்தில் மாணவர்கள் இலவச சைக்கிள் கொள்முதல் நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால் பரபரப்பு நிலவியது.
நாஜிம் (தி.மு.க.,): எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். மாணவர்களுக்கு தரும் சைக்கிள்களை எங்கு வாங்கினீர்கள்.
அமைச்சர் தேனீஜெயக்குமார்: அரசின் ஜெம்போர்ட்டல் வழியாக தான் அரசு கொள்முதல் செய்தது. ஒரு சைக்கிள் 4 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.
நாகதியாகராஜன் (தி.மு.க.,): அரசு வழங்கும் சைக்கிள் படுமோசமாக உள்ளது. அந்த சைக்கிளில் பெடல் கூட இல்லாமல் இருக்கிறது.
நாஜிம் (தி.மு.க.): அந்த ஜெம்போர்ட்டலே பிராடு தான்.
அமைச்சர் தேனீஜெயக்குமார்: அரசு கொள்முதல்கள் அனைத்தும் ஜெம்போர்ட்டலில் தான் வாங்க வேண்டும். இதில் இந்தியாவில் இருந்து பல நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் குறைந்த தொகை அடிப்படையில் சைக்கிள் வாங்கப்பட்டது. இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை.
செந்தில்குமார் (தி.மு.க.,): மாணவர்களுக்கு வழங்கும் சைக்கிள் தரம் இல்லாமல் உள்ளது. மாணவர்களுக்கு நேரடியாக 4 ஆயிரம் ரூபாய் நிதியாக தந்துவிடலாம். அவர்களை பிடித்த நல்ல தரமான சைக்கிள்களை வாங்கி கொள்ளலாம்.
சபாநாயகர் செல்வம்: இது நல்ல ஆலோசனை. இது தொடர்பாக அமைச்சர் பரிசீலிக்கலாம்.
நாஜிம்(தி.மு.க.,): மாணவர்களுக்கு சைக்கிள் தருவதற்கு பதில் ஸ்கூட்டியே கொடுத்துவிடலாம். மாணவர்ளும் ஜம்முனு பள்ளிக்கு வருவாங்க...
சம்பத் (தி.மு.க.,): பள்ளி மாணவர்களுக்கு லைசென்ஸ் கிடையாது என்பதையும் பார்க்க வேண்டும்.
அமைச்சர் தேனீஜெயக்குமார்: ஒரு நல்ல சைக்கிள் வாங்க வேண்டுமெனில் 12 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் தான் வாங்க முடியும். ஆனால் அரசு விதிமுறைகளின்படி ஜெம்போர்ட்டலில் குறைந்த விலையில் தான் சைக்கிள் வாங்க வேண்டியுள்ளது. இதில் எனக்கே உடன்பாடியில்லை. எதிர்காலத்தில் சைக்கிள் கொள்முதல் குறித்து முதல்வருடன் கலந்து பேசி தெரிவிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டசபையில் மாணவர்களுக்கான சைக்கிள் கொள்முதல் விவகாரம் குறித்து தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சரிடம் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்ததால் பரபரப்பு நிலவியது.