/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி உரிமங்களை புதுப்பிக்க மழை நீர் கட்டமைப்பு கட்டாயம் உழவர்கரை ஆணையர் அறிவிப்பு
/
நகராட்சி உரிமங்களை புதுப்பிக்க மழை நீர் கட்டமைப்பு கட்டாயம் உழவர்கரை ஆணையர் அறிவிப்பு
நகராட்சி உரிமங்களை புதுப்பிக்க மழை நீர் கட்டமைப்பு கட்டாயம் உழவர்கரை ஆணையர் அறிவிப்பு
நகராட்சி உரிமங்களை புதுப்பிக்க மழை நீர் கட்டமைப்பு கட்டாயம் உழவர்கரை ஆணையர் அறிவிப்பு
ADDED : ஜன 02, 2025 06:32 AM
புதுச்சேரி: மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்தினால் மட்டுமே, இனி நகராட்சி உரிமங்களை புதுப்பிக்க முடியும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் புதுச்சேரியை தண்ணீர் பற்றாக்குறை மாவட்டமாக வகைப்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி கலெக்டர் நடத்திய கலந்தாய்வு கூட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில், உழவர்கரை நகராட்சியானது எளிமையான முறையில் மிக குறைந்த செலவில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை செயல்படுத்த மத்திய அரசின் நீராதாரத் துறை பரிந்துரைத்த முறைழை உழவர்கரை நகராட்சி இணையதளம் www.oulmun.in இல் பதிவேற்றம் செய்துள்ளது.
ஆகவே உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகளில் எளிமையான மழை நீர் கட்டமைப்பு ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும். மண் வளத்தை காக்க வேண்டும்.
வரும் நிதியாண்டில் நகராட்சி உரிமங்களை புதுப்பிக்கவும், நகராட்சி சம்பந்தப்பட்ட அனுமதி பெறவும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி, அதற்கான தகவலை புகைப்படத்துடன் இணைக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு இளநிலை பொறியாளர் வெங்கடேசன்-9442291376 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.