/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இனி பத்திரப்பதிவின்போதே தானியங்கி பட்டா: முதல்வர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்
/
இனி பத்திரப்பதிவின்போதே தானியங்கி பட்டா: முதல்வர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்
இனி பத்திரப்பதிவின்போதே தானியங்கி பட்டா: முதல்வர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்
இனி பத்திரப்பதிவின்போதே தானியங்கி பட்டா: முதல்வர் ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்
ADDED : டிச 19, 2024 06:00 AM

புதுச்சேரி: பத்திரப் பதிவின் போது தானியங்கி பட்டா மாற்றம் திட்ட சேவையை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசின் வருவாய்த் துறையின் கீழ் இயங்கி வரும் நில அளவை மற்றும் பத்திர பதிவேடு துறைகளில் உள்ள செயல்பாடுகளை மேம்படுத்த மத்திய அரசின் திட்டமான நில பதிவேடுகள் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலமாக மக்கள் சேவை சார்ந்த பணிகளை மின் மயமாக்குதல் மற்றும் நேரடி சேவையை வழங்கிட மத்திய அரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
தற்போது நில அளவை பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு நிலவரி திட்ட நகல், அதாவது செட்டில்மெண்ட் நகல் மற்றும் பட்டா காப்பி ஆகியவைகளை இணைய வழி மற்றும் பொது சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவும் கணினி மயமாக்கப்பட்டு முத்திரைத்தாள்களும் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பத்திரப்பதிவுத்துறை மென்பொருளான இ- பத்திரம் மற்றும் மற்றும் நில அளவைத் துறையின் துறையின் மென்பொருளான 'நிலமகள்' இரண்டையும் இணைத்து தானியங்கி பட்டா மாற்றம் முறை கொண்டுவரப்படும் என, முதல்வர் ரங்கசாமி, கடந்த பட்ஜெட் உரையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, அதற்கான மென்பொருள் வடிமைப்பு இணைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இப்போது அனைத்து பணிகளும் முடிந்து தானியங்கி பட்டா திட்டம் அறிமுகப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி ஒருவர் பத்திரப் பதிவு செய்யும்போது தானியங்கி பட்டா மாற்றம் தாலுகா அலுவலகங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த இணையதள சேவையினை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் துவங்கி வைத்தார். அமைச்சர் லட்சுமிநாராயணன், வருவாய்த் துறை செயலர் ஆஷிஷ் மாதோராவ் மோரே, கலெக்டர் குலோத்துங்கன், நில அளவை துறை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் தேசிய தகவலியல் மைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
என்ன நிபந்தனை:
விற்பனையாகும் நிலத்திற்கு தனியாக உட்பிரிவு எண் இருத்தல் வேண்டும். அந்த உட்பிரிவு எண்களுக்கு பட்டா மற்றும் பத்திரம் இருக்க வேண்டும். விற்பனை செய்யும் நிலத்தின் மீது வேறு எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது.
யார் பெயரில் பட்டா உள்ளதோ அவரே விற்பனையாளராக இருத்தல் வேண்டும். விற்பனையாகும் நிலத்திற்கு ஒரே உட்பிரிவு அதாவது தனி பட்டாவாக இருத்தல் வேண்டும்.
ஒரு வாரம்:
இந்த நிலங்களை பத்திரப்பதிவின்போது சார் பதிவாளர் நிலையிலேயே இணைய வழி மூலம் தானியங்கி பட்டா மாறுதலுக்கு தாலுகா அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட உள்ளது. அப்படி, சார் பதிவாளர் அலுவலகங்களில் பரிந்துரைக்கப்படும் பட்டாக்கள் தானியங்கி பட்டா மாறுதலுக்கு தனியாக தாசில்தார் மூலம் பட்டா பெயர் மாறுதல் செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தனியாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. மேலும் அப்படி பதியப்படும் பத்திரங்களை ஒரு வாரத்திற்குள் தாசில்தார் அலுவலகத்தில் பட்டாவினை மாற்றம் செய்ய மென்பொருளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

