/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர். காங்., 14ம் ஆண்டு துவக்க விழா
/
என்.ஆர். காங்., 14ம் ஆண்டு துவக்க விழா
ADDED : பிப் 04, 2024 03:37 AM
புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியின் 14ம் ஆண்டு துவங்க விழா வரும் 7 ம் தேதி கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
இதுகுறித்து என்.ஆர்.காங்., மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஜெயபால் வெளியிட்டுள்ள அறிக்கை:
அகில இந்திய என்.ஆர். காங்., பேரியக்கம் வரும் 7ம் தேதி தனது 14ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
இதையொட்டி, என்.ஆர்.காங்., கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழா வரும் 7ம் தேதி காலை 10:00 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
அதில், கட்சி தலைவரும், முதல்வருமான ரங்கசாமி தலைமை தாங்கி, கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்குகிறார்.
தொடர்ந்து, கட்சி துவக்க விழாவை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும், தொகுதி தோறும் கட்சி கொடியேற்றி, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.