/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., 16ம் ஆண்டு துவக்க விழா அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
என்.ஆர்.காங்., 16ம் ஆண்டு துவக்க விழா அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
என்.ஆர்.காங்., 16ம் ஆண்டு துவக்க விழா அமைச்சர் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 09, 2026 04:56 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: என்.ஆர்.காங்., பேரியக்கத்தின் 16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அமைச்சர் லட்சுமிநாராயணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
புதுச்சேரி மாநிலத்தில், அகில இந்திய என்.ஆர்.காங்., 16ம் ஆண்டு துவக்க விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
அதன்படி, ராஜ்பவன் தொகுதி அதிதி ஓட்டல் சிக்னல் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி, கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைத்து மகளிர்களுக்கும் சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில், தொகுதி என்.ஆர்., காங்., நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் ராஜ்பவன் தொகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
