டாப் லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் பிரசாரம்
டாப் லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் பிரசாரம்
ADDED : மார் 31, 2026 11:02 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து, ஜீவானந்தபுரத்தில் உள்ள ஜல முத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., - ல.ஜ.க., மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
வேட்பாளர் சிவக்கொழுந்திற்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்து பெண்கள் வரவேற்றனர். பிரசாரத்தில் வேட்பாளர் சிவக்கொழுந்து, வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, முதல்வர் ரங்கசாமியின் பல்வேறு திட்டங்களையும், எதிர்கால நல திட்டங்களையும் எடுத்துக்கூறி 'ஜக்கு' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். இதில், என்.ஆர்.காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
