என்.ஆர்., காங்., வேட்பாளர் வில்லியனுாரில் ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்., காங்., வேட்பாளர் வில்லியனுாரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 06:36 AM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார், நேற்று காலை வி.மணவெளி பகுதியில் கூட்டணி கட்சியினருடன் சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது முதல்வர் ரங்கசாமி தலைமையில், மீண்டும் ஆட்சி அமைக்க ஜக்கு சின்னத்தில் ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார்.
ரங்கசாமி முதல்வரானால் தான், புதுச்சேரி புதுபொலிவு பெறும். படித்த இளைஞர்கள் நேர்மையான முறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏழை மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கும் எனக்கூறி ஓட்டு சேகரித்தார்.
