பாகூருக்கு கோவில் நகர திட்டம் என்.ஆர்.காங்., வேட்பாளர் வாக்குறுதி
பாகூருக்கு கோவில் நகர திட்டம் என்.ஆர்.காங்., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : மார் 30, 2026 06:49 PM

பாகூர்: கோவில் நகர திட்டத்தை, பாகூரில் முழுமையாக நிறைவேற்றி, சிறப்பான ஒரு நகரமாக மாற்றி காட்டுவேன் என, என்.ஆர்.காங்., வேட்பாளர் தியாகராஜன் வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
பாகூர் தொகுதியில் தே.ஜ., கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்., வேட்பாளர் தியாகராஜன் நேற்று கூட்டணி கட்சி நிர்வாகிளுடன் பாகூர் வேதபுரிநத்தம், கம்பன் நகர், அக்ரஹார வீதி, மேற்கு வீதிகளில் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர், பாகூரில் புராதான சிவன் கோவில் இருந்து வரும் நிலையில், கோவில் நகர திட்டத்தை பாகூர் பகுதிக்கு முழுமையாக நிறைவேற்றி, சிறப்பான ஒரு நகரமாக மாற்றி காட்டுவேன்.
ஏழை மக்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மிக விரைவாக கொண்டு வந்து சேர்ப்பேன். இப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்கவும், வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.
இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு கொடுக்க கூடிய தொழில் திட்டங்களை, மத்திய, மாநில அரசுகளை அணுகி இந்த பகுதிக்கு கொண்டு வருவேன்.
இத்திட்டங்களை நிறைவேற்றிட, முதல்வர் ரங்கசாமி தலைமையில் மீண்டும் புதுச்சேரியில் ஆட்சி அமைத்திட வேண்டும். அதற்கு, எனக்கு ஜக்கு சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
பிரசாரத்தில் பா.ஜ., விக்ரமன், ருத்ரமூர்த்தி, ஜெ.சி.எம். ரீகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
