தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., வேட்பாளர்கள் நள்ளிரவில் ரகசிய ஆலோசனை

 என்.ஆர்.காங்., வேட்பாளர்கள் நள்ளிரவில் ரகசிய ஆலோசனை

 என்.ஆர்.காங்., வேட்பாளர்கள் நள்ளிரவில் ரகசிய ஆலோசனை


ADDED : ஏப் 01, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நள்ளிரவு என்.ஆர்.காங்., வேட்பாளர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் என்.ஆர்.காங்., கட்சியின் முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்க நேற்று இரவு 10:00 மணியளவில் காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் பரவியது .

​இதனைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொருவராக ஓட்டலுக்கு வரத் துவங்கினர். முதல்வர் ரங்கசாமி தலைமையில் இந்த கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இரவு 10:00 மணிக்குத் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட கூட்டத்திற்கு வேட்பாளர்கள் அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால், நள்ளிரவு 12:00 மணி வரை முதல்வர் ரங்கசாமி ஓட்டலுக்கு வரவில்லை. வேட்பாளர்கள் மட்டும் ரகசிய ஆலோசனை நடத்தினர்.

முதல்வர் ரங்கசாமி வராதது விவாதத்திற்கு உள்ளானது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us