/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் பாதித்த மக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் ஆறுதல்
/
மழையால் பாதித்த மக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் ஆறுதல்
மழையால் பாதித்த மக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் ஆறுதல்
மழையால் பாதித்த மக்களுக்கு என்.ஆர்.காங்., பிரமுகர் ஆறுதல்
ADDED : டிச 02, 2024 06:55 AM

புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மொத்தம் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பொதுமக்களுக்கு உணவு வழங்கி வீடுகளில் சூழ்ந்துள்ள மழை நீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற ஏற்பாடு செய்து கொடுத்தார். என்.ஆர்.காங்., கட்சியினர், ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள் உடனிருந்தனர்.