/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் என்.ஆர்.காங்., 30 தொகுதிகளிலும் கூட்டங்கள் நடத்த முடிவு

ADDED : அக் 05, 2024 04:31 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் என்.ஆர்.காங்., 30 தொகுதிகளிலும் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு கடந்த 2021 ஆண்டு ஜூன் 16ம் தேதி ஆட்சி பொறுப்பேற்றது. இதுவரை 3 ஆண்டுகள், 3 மாதங்களாகி உள்ளது. இன்னும் 21 மாதங்கள் மட்டுமே உள்ளது. 2026 ஜூன் 16ம் தேதியுடன் ஆட்சி காலம் முடிகிறது. அதையடுத்து அனைத்து கட்சிகளும் பொறுப்பாளர்களை நியமித்து கட்சியை பலப்படுத்தி வருகின்றன.
எதிர்க்கட்சிகளான காங்., - தி.மு.க., ஏற்கனவே சட்டசபை தேர்தல்களுக்கான காய்நகர்தலை துவங்கி விட்டன. மக்கள் பிரச்னையில் கடுமையாக அரசை விமர்சித்து வருகின்றன. பா.ஜ.,வும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை ஏற்கனவே துவங்கிவிட்டது.
ஆனால் ஆளும் என்.ஆர் காங்., மட்டும் மவுனமாக இருந்த சூழ்நிலையில், முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில் சட்டசபை தேர்தல் பணிகளை துவக்கி உள்ளது. நேற்று இ.சி.ஆரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநில செயலாளர் ஜெயபால் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து அமைப்புகளுக்கும், படிநிலை பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் 30 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.