UPDATED : மே 15, 2026 07:33 PM
ADDED : மே 15, 2026 07:31 PM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் ஜனார்த்தனன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.
மணமக்கள் கிருஷ்ணராஜ் - காவ்யா திருமணம் வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்தது. அதனை தொடர்ந்து பைபாஸ் கோபால்சாமி திருமண நிலையத்தில் வரவேற்பு விழா நடந்தது.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் சிவக்கொழுந்து, அன்பழகன், ஆறுமுகம், ரவிக்குமார், ஐய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,கள் பாஸ்கர், தட்சணாமூர்த்தி, பாலன், அ.தி.மு.க., மாநில இணை செயலாளர் திருநாவுக்கரசு, கவுரிவல்லவன், முரளிதரன், ரவிபாண்டுரங்கன், முன்னாள் சேர்மன் பாலமுருகன், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணை சேர்மன் சங்கர், பா.ஜ., நிர்வாகிகள் கண்ணபிரான், ஏழுமலை, கனகராஜ், புருேஷாத்தம்மன், கதிரேசன், வாசன், சதீஷ், சுந்தர், சுதாகர், பாவடை, அன்பரசன், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள் அனந்தசங்கர், செல்வம், சேகர், மனோகர், அய்யனார், அர்சுனன், சுந்தர், வக்கீல் மணி, எல்லப்பன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக வரவேற்பு விழாவிற்கு வந்தவர்களை பழனி - சரஸ்வதி, கோகுலகிருஷ்ணன் - கார்த்திகா மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.
