/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை
/
என்.ஆர்.காங்., இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஜூலை 21, 2025 05:15 AM

புதுச்சேரி : அகில இந்திய என்.ஆர்.காங்., இளைஞரணி இணையவழி உறுப்பினர் சேர்க்கை துவக்க விழா எல்லைப்பிள்ளைச்சாவடி தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு என்.ஆர்.காங்., இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு இணையவழி உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்து அயைாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, என்.ஆர்.காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் மற்றும் இளைஞரணி துணை தலைவர்கள் பிரபாகரன், திருமுருகன், ரத்தினவேலு, பொதுச்செயலாளர் மணிமாறன், வீரப்பன், செயலாளர் அரவிந்த், மத்திய மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன், மத்திய மாவட்ட செயலாளர் குரு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.