/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : பிப் 08, 2025 07:07 AM
புதுச்சேரி : ''வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் என்.ஆர் காங்., போட்டியிடும்'' என, அக்கட்சி தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி தெரிவித்தார்.
காங்., கட்சியில் இருந்து வெளியேறிய முதல்வர் ரங்கசாமி, 2011 பிப்ரவரி 7ம் தேதி, என்.ஆர்.காங்., என்ற கட்சியை துவக்கினார்.
என்.ரங்கசாமி என்ற அவரது பெயரில் கட்சி துவக்கியதாக விமர்சனம் எழுந்தது. என்.ஆர்.காங்., என்பது 'அகில இந்திய நமது ராஜ்ஜியம்' என, ரங்கசாமி விளக்கம் தந்தார்.
தற்போது, புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த என்.ஆர்.காங்., கட்சியின் 15வது ஆண்டு விழாவில், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டியிடும் என அக்கட்சி தலைவர் ரங்கசாமி அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, 'என்.ஆர்.காங்., தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என பலதரப்பிலிருந்து கோரிக்கை வருகிறது.
தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
இதனால் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்., போட்டியிடும். காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு செயல்படுவோம்' என்றார்.