/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.காங்., கட்சி 15ம் ஆண்டு விழா முதல்வர் தலைமையில் கொண்டாட்டம்
/
என்.ஆர்.காங்., கட்சி 15ம் ஆண்டு விழா முதல்வர் தலைமையில் கொண்டாட்டம்
என்.ஆர்.காங்., கட்சி 15ம் ஆண்டு விழா முதல்வர் தலைமையில் கொண்டாட்டம்
என்.ஆர்.காங்., கட்சி 15ம் ஆண்டு விழா முதல்வர் தலைமையில் கொண்டாட்டம்
ADDED : பிப் 08, 2025 06:09 AM

புதுச்சேரி: புதுச்சேரி என்.ஆர்.காங்., கட்சியின் 15ம் ஆண்டு விழா, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி கட்சி கொடியேற்றினார். கட்சி அலுவலகத்தில் சுவாமி படங்களுக்கு பூஜை செய்தார். பிறகு, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி அவர் பேசியதாவது:
என்.ஆர்.காங்., கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டு வரும் தொண்டர்களுக்கு நன்றி. இந்த கட்சியின் வளர்ச்சி, தொண்டர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் கையில்தான் உள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் 2026 தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெறுவோம்.
அதற்கான பணியை இப்போதே நிர்வாகிகள், தொண்டர்கள் துவங்க வேண்டும்.
மக்களுக்கு நல்லாட்சியை கொடுத்து வருகிறோம். மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நடந்து வருகிறோம்.
கட்சி அமைப்பை வலுப்படுத்த 11 தொகுதிகளுக்கு நிர்வாகிகள் நியமித்துள்ளோம். மீதமுள்ள தொகுதிகளுக்கும் விரைவில் நியமிக்கப்படுவார்கள். 2026 சட்டசபை தேர்தலிலும் நாம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், ஆறுமுகம், ரமேஷ், முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா, முன்னாள் சேர்மன்கள் பாலமுருகன், ஞானசேகரன், பொதுச்செயலாளர் ஜெயபால், நந்தாஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.