தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அதிகாரிகளால் திட்டங்கள் முடக்கம் என்.ஆர்., இலக்கிய பேரவை புகார்

அதிகாரிகளால் திட்டங்கள் முடக்கம் என்.ஆர்., இலக்கிய பேரவை புகார்

அதிகாரிகளால் திட்டங்கள் முடக்கம் என்.ஆர்., இலக்கிய பேரவை புகார்


UPDATED : அக் 27, 2026 01:11 AM

ADDED : அக் 27, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 01:11 AM ADDED : அக் 27, 2026 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக என்.ஆர்., இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

கடந்த 10 ஆண்டுகளாக முதல்வர் ரங்கசாமி மாநில மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தேர்வு செய்து அவற்றை நடைமுறை படுத்துவதில் இந்திய அளவில் நம்பர் ஒன் முதல்வராக திகழ்கிறார். மாநிலத்தில் வருவாய் குறைந்த போதிலும் மாற்று வழிகளில் புதுபுது திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி அவற்றை நடைமுறைக்கு கொண்டு வருகிறார்.

இப்படிப் பட்ட சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் துறைச்செயலாளர்களின் மெத்தனப்போக்கால் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த காலத்தில் பயனாளிகளை சென்றடைவதில்லை. குறிப்பாக பாட்கோவில் கல்விக்கடன் விண்ணப்பித்த ஆதி திராவிட மாணவர்களுக்கு உரிய காலத்தில் கடன் வழங்க படாததால் எண்ணற்ற மாணவர்கள் உயர்கல்வி தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலை பல துறைகளிலும் நீடிக்கிறது. இதனால் மாநில வளர்ச்சி மட்டுமின்றி பயனாளிகளின் எதிர்பார்ப்பை செயல்படுத்த முடியவில்லை. இதனை என். ஆர். இலக்கிய பேரவை வன்மையாக கண்டிக்கிறது. இனி வரும் காலங்களில் அரசு துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மாநில திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us