என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் கிருமாம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் கிருமாம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 06:49 AM

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ், தொகுதி முழுதும் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.
அவருடன் அவரது மனைவி பிரியா, ஊர் முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் என திரண்டு வந்து ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்கின்றனர்.
வேட்பாளர் மோகன்தாஸ் சொந்த ஊரான கிருமாம்பாக்கம் பேட்டில் நேற்று வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். கந்தன்பேட், சார்காசிமேடு கிராமத்தில் ஓட்டு சேகரித்போது அவர், பேசுகையில் 'முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த திட்டங்களில் பயன் அடைந்தவர்கள் ஜக்கு சின்னத்திற்குத் தான் ஓட்டு போடுவேன் என தெரிவிக்கின்றனர். சொந்த ஊராக இருந்தாலும் அனைத்து ஊரும் நன்கு அறிந்தவன். அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறதோ அதை வெற்றி பெற்றவுடன் செய்து தொகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வேன்' என்றார்.
