தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் பனித்திட்டு கிராமத்தில் ஓட்டு சேகரிப்பு

 என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் பனித்திட்டு கிராமத்தில் ஓட்டு சேகரிப்பு

 என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் பனித்திட்டு கிராமத்தில் ஓட்டு சேகரிப்பு


ADDED : மார் 28, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலம் தொகுதி பனித்திட்டு கிராமத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

ஏம்பலம் தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ், ஜக்கு சின்னத்திற்கு தீவிரமாக ஓட்டுகள் சேகரித்து வருகிறார். நேற்று காலை சேலியமேடு, அரங்கனுார், பின்னாட்சிக்குப்பம், சார்காசிமேடு உள்ளிட்ட கிராமங்களில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

மாலை பனித்திட்டு கிராமத்தில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

முன்னதாக அவருக்கு பனித்திட்டு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்குள்ள கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது, அவர், கடந்த 5 ஆண்டு கால முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்கள், பனித்திட்டு பகுதியில் துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

மீண்டும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன், பனித்திட்டு கிராமத்தில் துறைமுக திட்டத்தை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

இக்கிராமத்தில் மீன் வலை பழுதுபார்ப்பு கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பனித்திட்டு கடற்கரையோரம் கிராமம் என்பதால், இங்கு உப்பு நீர் பாதிப்பு உள்ளது. இதனால், கிராம மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். சாலை, கழிவு நீர் வாய்க்கால், தெரு மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

முதல்வர் ரங்கசாமியின் தலைமையில் என்.ஆர்.காங்., கூட்டணி அரசு அமைந்திட எனக்கு ஜக்கு சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.

என்.ஆர். காங்., நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us