என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து அசோக் நகர் பகுதியில் ஆதரவு திரட்டினார்
என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து அசோக் நகர் பகுதியில் ஆதரவு திரட்டினார்
ADDED : மார் 29, 2026 07:29 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து, அசோக் நகரில் கூட்டணி கட்சியினருடன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் லாஸ்ப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தே.ஜ., கூட்டணியின் என்.ஆர். காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து நேற்று தொகுதிக்குட்பட்ட அசோக் நகரில் உள்ள நேதாஜி வீதி, காமராஜர் வீதி, தொல்காப்பியர் வீதி, கவிக்குயில் வீதி மற்றும் ஜீவானந்தம் வீதிகளில் வீடு, வீடாக சென்று வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி 'ஜக்கு' சின்னத்திற்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, வேட்பாளர் சிவக்கொழுந்தை பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்னர்.
அவருடன் சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார், என்.ஆர்.காங்., பா.ஜ., அ.தி.மு.க. ல.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஓட்டு சேகரிப்பின்போது, கடந்த 5 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முதல்வர் ரங்கசாமி செய்துள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் எதிர்கால மக்கள் நல திட்டங்களையும் எடுத்துக் கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
