என்.ஆர்.காங்., வேட்பாளர் லாஸ்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., வேட்பாளர் லாஸ்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2026 08:22 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: லாஸ்பேட்டையில் என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து ஓட்டு சேகரித்தார்.
லாஸ்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் சிவக்கொழுந்து நேற்று லாஸ்பேட்டை சிவ சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து அப்பகுதியில் ஓட்டு சேகரித்தார். அப்போது வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கி ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமியின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தமது எதிர்கால திட்டங்களையும் வாக்காளர்களிடம் எடுத்துக் கூறினார். பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஓட்டு சேகரிப்பில் சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார், என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
