என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் கரிக்கலாம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பு
என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் கரிக்கலாம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பு
ADDED : மார் 31, 2026 07:10 PM

புதுச்சேரி:ஏம்பலம் (தனி) தொகுதி என்.ஆர்.காங்., வேட்பாளர் மோகன்தாஸ் நேற்று கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசுகையில், 'கரிக்கலாம்பாக்கம் வளர்ந்து வரும் கிராமமாக உள்ளது. இதனால் அவர்களுக்கு பல்வேறு தேவைகள் கோரிக்கையாக உள்ளது குறிப்பாக சாலை அமைப்பது, தடையில்லா மின்சாரம், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டியுள்ளது. இதனை நான் வெற்றி பெற்றதும் செய்து முடிப்பேன். அதேபோன்று அனைத்து திட்டங்களும் அரசிடம் இருந்து பெற்று உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுப்பேன். எனவே ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு போட்டு என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
பிரசாரத்தின் போது ஊர் முக்கியஸ்தர்கள் பலராம், சேகர், சங்கர், குப்பன், குமரேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
