sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

என்.ஆர்.காங்., ஆண்டு விழா முதல்வர் ரங்கசாமி கொடியேற்றம்

/

என்.ஆர்.காங்., ஆண்டு விழா முதல்வர் ரங்கசாமி கொடியேற்றம்

என்.ஆர்.காங்., ஆண்டு விழா முதல்வர் ரங்கசாமி கொடியேற்றம்

என்.ஆர்.காங்., ஆண்டு விழா முதல்வர் ரங்கசாமி கொடியேற்றம்


ADDED : பிப் 07, 2024 11:23 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: என்.ஆர்.காங்., கட்சியின் ஆண்டு விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி கொடி ஏற்றினார்.

காங்., கட்சியில் இருந்து பிரிந்த முதல்வர் ரங்கசாமி, கடந்த 2011ம் ஆண்டு பிப்., 7 ம் தேதி அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் (என்.ஆர்.காங்.,) என்ற புதிய கட்சியை துவக்கினார். அடுத்த 3 மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்தார். 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கட்சியின் ஆண்டு விழா, இ.சி.ஆர்., சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

காலை 10:00 மணிக்கு, கட்சி அலுவலகம் வந்த முதல்வர் ரங்கசாமி, கட்சி கொடியை ஏற்றி வைத்து, பூஜை செய்து வழிப்பட்டார்.தேச தலைவர் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

முன்னதாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எஸ்.வி. பட்டேல் சாலை அஜந்தா சிக்னல் அருகே என்.ஆர்.காங்., கட்சி கொடியேற்றி, ஊர்வலமாக கட்சி அலுவலகம் வந்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், சந்திரபிரியங்கா, முன்னாள் அமைச்சர் தியாகராஜன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், சுகுமாறன், கோபிகா, கட்சி பிரமுகர் நந்தா ஜெய ஸ்ரீதரன், முன்னாள் சேர்மன் புவனேஸ்வரன், பாலமுருகன், நிர்வாகி வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us